மஹிந்த ராஜபக்சவைத் தவிர்த்து அவரது குடும்பத்தில் யாரையும் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதில்லையென தெரிவிக்கிறார் குமார வெல்கம.
தீவிர மஹிந்த ஆதரவாளரான போதிலும் ராஜபக்ச குடும்ப ஆளுமையை விரும்பாத நபராக தன்னைக் காட்டிக்கொள்ளும் வெல்கம அண்மையில் மஹிந்த இந்தியாவில் வைத்து தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அவரது குடும்பத்தவர் ஒருவரை ஆதரிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார்.
இதேவேளை வெல்கமவை அமைதி காக்கும்படி மஹிந்த கேட்டுக்கொண்டுள்ள போதிலும் அதையும் மீறி அவர் கருத்துரைத்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment