அண்மையில் அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமுக்குள் வைத்து 21 வயது சிப்பாய் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் குறித்த முகாமைச் சேர்ந்த மேலும் இரு சிப்பாய்களே தொடர்பு பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா பொலிஸ்.
புலத்கொஹுபிட்டியவைச் சேர்ந்த கொலையான இளைஞரின் ஆயுதத்தைத் திருடி வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கொலை செய்திருப்பதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காவல் பணியில் இருந்த சிப்பாய் நெஞ்சுப் பகுதியில் குத்திக் காயப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment