போதைப் பொருள் வர்த்தகத்தில் வெலே சுதாவின் முக்கிய சகா என கருதப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் முஹமத் சித்தீக் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிசார் முன்னுக்குப் பின் முரணான சாட்சியங்களை முன் வைத்து வந்ததன் பின்னணியில் குறித்த நபர் குற்றமற்றவர் என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
8.1 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கிலிருந்தே பொலிசாரின் அலட்சியப் போக்கினால் சித்தீக் உட்பட நால்வர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து கைது செய்து கொண்டுவரப்பட்ட சித்தீக் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எனவும் வெலே சுதா ஊடாக 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததோடு சிறைச்சாலையிலும் குறித்த நபருக்கு விசேட வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment