நாணய பெறுமதி வீழ்ச்சியை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இது பாரதூரமான விளைவுகளைத் தரும் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு எதிரான பெறுமதி நேற்றைய தினம் 170 ரூபாவைத் தொட்டிருந்த நிலையில், அரசாங்கம் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் மஹிந்த தெரிவிக்கிறார்.
எனினும், உலகின் பல நாடுகள் இப்பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாகவும் அமெரிக்க டொலரின் பெறுமதியுர்வே காரணம் எனவும் நிதியமைச்சர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment