நடைமுறை அரசின் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கொழும்பு 10. மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரியின் வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா எதிர்வரும 19.09.2018; புதன் கிழமை காலை 8.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கட்டடிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
மேற்படி விழாவில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் ராதா கிருஷ்ணன,; மேல்மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச உட்பட பல அமைச்சர்களும், மேல்மாகாண சபை அங்கத்தவர்களும், கொழும்பு மாநகரசபை அங்கத்தவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment