மைத்ரிக்கு முதுகெலும்பில்லை; ஆட்சியதிகாரத்தைக் கோரும் மேர்வின்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 25 September 2018

மைத்ரிக்கு முதுகெலும்பில்லை; ஆட்சியதிகாரத்தைக் கோரும் மேர்வின்!


தன்னைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்தும் அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க முதுகெலும்பில்லாத நிலையில் மைத்ரிபால ஜனாதிபதியாக இருப்பதாக தெரிவிக்கிறார் மேர்வின்.


உன்னால் முடியாவிட்டால் என்னிடம் ஒப்படை என பகிரங்கமாக சவால் விடுக்கின்ற மேர்வின் சில்வா, இப்பேற்பட்ட ஒரு மனிதரால் பொருளாதாரத்தையோ நாட்டையோ கட்டியெழுப்ப முடியாது என்றும் தெரிவிக்கிறார்.

2015ல் பிரதான கட்சிகளால் ஒதுக்கப்பட்ட மேர்வின் சில்வா, மீண்டும் அரசியலில் இடம் தேடிக்கொண்டிருக்கின்றமையும் அவ்வப்போது சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment