குடும்ப பாசத்தினால் தனது குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப்படுத்த முனைந்தே கடந்த தடவை மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததாகவும் மீண்டும் அந்ந நிலைக்குச் செல்வது பின்னடைவையே உருவாக்கும் எனவும் எச்சரித்துள்ளார் கூட்டு எதிர்க்கட்சி முக்கியஸ்தர் குமார வெல்கம.
தனது புதல்வர் நாமல் 35 வயதையடையவில்லையென்பதால் தனது சகோதரருள் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியென இந்தியாவில் வைத்து மஹிந்த வெளியிட்டுள்ள கருத்துக்கே குமார வெல்கம இவ்வாறு பதிலளித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் முன்னிலைப்படுத்தப்படுவதனால் கூட இருந்து கொண்டே பலர் மஹிந்தவுக்கு எதிராகப் பணியாற்றியதாகவும் வெல்கம மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment