88வது தேசிய தின கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது சவுதி அரேபியா.
இதனடிப்படையில் எதிர்வரும் ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் சவுதியின் விமானப் படை சாகசங்களும் எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன விமானங்களுடன் ஐக்கிய அரபு அமீரக குழுவொன்றும் கலந்துகொள்ளவுள்ள அதேவேளை நவீன விமானங்கள் ரியாத், ஜித்தா மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் பறக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment