முஸ்லிம் பிரதர்ஹுட் எனும் பெயரில் இயங்கும் அமைப்பின் தலைவர் முஹம்மத் பதி உட்பட 66 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது எகிப்திய நீதிமன்றம்.
2013 மின்யா பகுதி பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் ஏலவே சில வழக்குகளில் குறித்த நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு மேன் முறையீடு மூலம் நீக்கப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
குறித்த வழக்கில் 700 பேர் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் 288 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்கும் 5 - 15 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment