கூட்டு எதிர்க்கட்சியினரின் கொழும்பை நோக்கிய மக்கள் பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேவைப்படின் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுமார் 5000 பொலிசார் இன்றைய தினம் நகரைச் சுற்றி கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது..
இதேவேளை, பேரணி ஆரம்பிக்கும் மற்றும் முடிவுறும் இடங்கள் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் தாம் ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment