மௌலவி ஆசிரியர் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவிக்கிறார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து பல வருடங்களின் பின்னால் எமது அமைச்சால் சமய ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டது.
எனினும் இந்த நியமனத்தின் வயதெல்லை 35 ஆக காணப்பட்ட காரணத்தினால் இதற்கு முன்னைய அரசின் காலத்தில் வழங்கப்பட்ட நியமனத்தில் காணப்பட்ட குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதால் இதன் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்குமாறு என்னிடம் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புக்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.
இது தொடர்பாக நான் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த நியமனத்துக்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும்
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்கள் தமது மாகாணங்களில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பான விபரங்களை எம்மிடம் சமர்பிக்கமையினால் அந்த மாகாணங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படவில்லை எனவே அந்த மாகாண சபைகளிடம் இருந்து உரிய தரவுகளை பெற்று அந்த மாகாணங்களுக்கும் விரைவில் விண்ணப்பம கோர எதிர்பார்த்துள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment