அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி மாவட்டத்தின் காரைதீவு கல்விக்கோட்டத்தில் உள்ள மாவடிப்பள்ளி கிராமத்தில் சருக் போடியாரின் மகனும் கிராமத்தின் முதல் ஆசிரியரும் முதல் முதலாம்தர அதிபரும் கமு அல் அஷ்ரப் மகாவிதியாலத்தின் பிரதி அதிபராகவும் கடமை புரிந்த மர்கூம் முகைதின்பாவா ஆதம்லெவ்வை அதிபருக்கும் அவரது துணைவியார் மாவடிப்பள்ளி கிராமத்தின் கிராம சேவை அதிகாரியாக பணி புரிந்த முஹம்மது ஹனிபா (பழைய விதானையார்)வின் சிரேஷ்ட புதல்வி ஹாஜியாணி முஹம்மது ஹனிபா சல்ஹாவீவிக்கும் சிரேஷ்ட புதல்வராக அல்ஹாஜ் ஆதம்லெவ்வை முஹம்மது மஸ்ஹூதுலெவ்வை அவர்கள் 1958.10.05 ம் திகதி திங்கக்கிழமை சுபஹ் நேரத்தில் இக்கிராமத்தில் பிறந்தார்கள்.
முஹம்மது மஸ்ஹூது என்பதன் பொருள் கிதாபின் ஆதாரப்படி
* தீர்மானிக்கும் நேரம் நிதானமாக தீர்மானிப்பார்.
* காரியத்தில் உதவியாக இருப்பார்.
* ஒரு காரியத்தை உற்றுநோக்கி பார்ப்பார்.
* அழுத்தமாக பேசுவார்.
இவ்வாறான சுபாபமுடைய இவர் 1965 ம் ஆண்டு கமு அல் அஷ்ரப் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியை தொடர்ந்து 1969 ம் ஆண்டு தொடக்கம் சம்மாந்துறை மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) க.பொ.த(சா/த),உயர்தரம் என்பனவற்றை பயின்று 1978 ம் ஆண்டு அப்பாடசாலையை விட்டு வெளியேறினார். 1979 தொடக்கம் 1988 ம் ஆண்டு வரை நீர்ப்பாசனத்திணைக்கலத்தில் நீர்ப்பாச்சும் அலுவலகராக பணி புரிந்த காலத்தில் மீண்டும் உயர்தரப்பரீட்சையில் உயர் சித்தி பெற்று பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
தொழில் புரியும் காலப்பகுதியில் கமு அல் அஷ்ரப் மகாவித்தியாலயத்தில் தொண்டர் ஆசிரியராக(1980 தொடக்கம் 1985 வரை)அப்துல் லதிப் ஜுனைதீன் ஆசரியர்,மசூரா எ.மஜீத் ஆசரியை ஆகியோருடன் இணைந்து பணியாற்றி இப்பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்தார்கள்.
அக்காலப்பகுதியில் மஸ்ஹூதுலெவ்வை ஆசிரியர்,ஜுனைதீன் ஆசிரியர் இருவரும் இப்பாடசாலையின் ஆசிரியர் விடுதியில் தங்கியிருந்து அவர்களின் உயர்கல்வியை தொடர்ந்தார்கள். மஸ்ஹூதுலெவ்வை ஆசிரியர் தலைமையில் மர்ஹூம் பரீட்ஹசன் ஆசிரியரின் பங்குபற்றலுடன் உயர்தர டியுஷன் வகுப்புக்களை இப்பாடசாலையில் ஆரம்பித்து நடாத்தி சாதனை படைத்து முதல் பேராதனைப்பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கு தெரிவுசெய்யப்பட்டு சாதனையை செய்துகாட்டியவர்.
பல்கலைக்கழகத்தில் கற்கும்போதே ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் ஒரே தடவையில் அறுவர் சித்திதியடைந்து இக்கிராமத்தில் காணப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.அதில் எம்.ஐ.எம்.சைபுதீன் அதிபர் அவர்கள் கிழக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் அவர்கள் அல்ஹாஜ் முகம்மது மஸ்ஹூதுலெவ்வை ஆசிரியர் அவர்கள் எ.எல்.ஜுனைதீன் ஆசிரியர் அவர்கள் எம்.வை.சித்தீக் ஆசிரியர் அவர்கள் மர்ஹூம் பரீட்ஹசன் ஆசிரியர் அவர்கள். இவ்வாறு பல சாதனைகளை புரிந்து கஷ்டப்பட்டு முன்னிலை அடைந்தார்.
1990 ம் அண்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி கமு அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் பணி புரியும் காலத்தில் 1991.12.25 ம் திகதி சாய்ந்தமருதூரைச்சேர்ந்த பாட்டானார் வழியில் மச்சி முறையான ஹாஜியானி மீராமுகைதீன் சித்தி சமதா என்பவரை திருமண பந்தத்தில் இணைத்துக்கொண்டார். இவரின் துனைவியார் ஒரு விஞ்ஞான பட்டதாரியாவார்.இவர் சிலகாலம் தாதியா பணியாற்றியபின் ஆசிரியர் சேவையில் இணைந்து பணியாற்றி அதிபர் சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பிரதி அதிபராக பணியாற்றி வருகின்றார்.
3பிள்ளைகளின் தந்தையான மஸ்ஹூதுலெவ்வை ஆசிரியர் அவர்களின் மூத்த மகள் பாத்திமா சிப்ரா மருத்துவப்பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவியாவார், இரண்டாவது மகனும்,மூன்றாவது மகளுமாக அவரது வாரிசுகள் காணப்பாடுகின்றார்கள்.
பட்டப்பின் கல்வி டிப்ளோமா(PGDE), ஊடகத்துறை கல்வி டிப்ளோமா போன்றவற்றை கற்றுத்தேறிய மஸ்ஹூதுலெவ்வை சேர் அவர்கள் 1993.01.01 ம் திகதி முதல் கமு சாஹிரா தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்று க.பொ.த.உயர்தரப்பிரிவிற்கு அலவையலும் விஞ்ஞான முறைமையும் என்னும் பாடத்தை கற்பித்து சாதனை புரிந்தார். 1995.01.25 ம் திகதியுடன் மீண்டும் அல் அஷ்ரப் மகாவித்தியாலயதிட்கு இடமாற்றம் பெற்று வந்தார்.இடைநிலைப்பிரிவுக்காக சமூகக்கல்விப்பாடத்தை கற்பித்து பல மாணவர்களின் எதிகாலதிற்கு வித்திட்டார்.
1997 ம் ஆண்டு அட்டாளச்சேனையில் நடைபெற்ற தேசிய மீலாதுதின விழாவின் பிரதிப்பொருளாளராக மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் நியமிக்கப்பட்டு அவ்விழா சிறப்பாக நடைபெற உதவியவர்களில் இவரும் ஒருவர். 1998 ம் ஆண்டு மஸ்ஹூதுலெவ்வை சேர் அவர்கள் ஆசிரியர் தொழிலில் இருந்து விடுவிப்பு பெற்று அரசியல் பிரவேசம் ஒன்றை தற்செயலாக செய்யவேண்டிய நிர்பந்தம் ஓன்று ஏற்பட்டது.அமைச்சராக இருந்த மர்ஹூம் எம்.எச்,எம் அஷ்ரப் அவர்களின் கீழ் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் பல சாதனைகளை புரிந்தார்.அதில் முதன்மையானது எஸ்.எச்.யாக்குப் ஆசிரியர்,எம்.ஐ.எம்.சைபுதீன் அதிபர் இருவரும் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டு அரைகுறையாககக்காணப்பட்ட இப்பாடசாலையின் அல் ஹூசைன் ஆராதனை மண்டபம் இருமாடிகளிக்கொண்ட மதீனா BLOCK போன்றவற்றை மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் துணைகொண்டு பூரணப்படுதியதுடன் ஆராதனை மண்டபத்துக்கு முன்னாள் உள்ள இரும்பு வேலி அமைப்பு,தாழ்நிலப்பகுதியிற்கு மண்ணிட்டு செப்பனிட்டமை. திறப்புவிழாவினை 2000.10.04 ம் திகதி நடாத்தி வைப்பதுக்கு பாரிய அளவில் முன்னெடுத்த நிலையில் தலைவர் அஷ்ரப் அவர்களின் அகால மரணத்தின் மூலம் அவைகள் தடைப்பட்டன.அதற்கான ஆயத்தங்கள் பாரிய அளவில் செய்யப்பட்ட போதும் அவ்விடயம் முடக்கப்பட்ட விடயத்தில் எல்லோரும் மனம் நொந்த நிலையில் காணப்பட்டனர்.
அரச தொழில் வாய்ப்புகள், 300 வீடுதிட்ட மானியம்,அரச ஊழியர்களின் நஷ்டஈடு, தனியார் நஷ்டஈடு போன்றவற்றை தலைவர் அஷ்ரப் அவர்களுடன் இணைந்து துரிதமாக மேற்கொண்டு சாதனை படைத்தார்.
முன்னாள் அமைப்பாளர் யாக்குப் ஆசிரியர் அவர்கள் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தனது அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்த மஸ்ஹூதுலெவ்வை ஆசிரியர் அவர்கள் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக இருந்த றவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்பாளராக மூன்று ஆண்டுகள் ஆசிரியர் தொழிலில் இருந்து விடுப்புப்பெற்று பணியாற்றினார்
2003 ம்ஆண்டு மீண்டும் பாடசாலையில் இணைந்துகொண்ட அவர் இப்பாடசாலையின் சமூகக்கல்வி ஆசிரியராகவும் இடைநிலை பிரிவுக்கான பகுதித்தலைவராகவும் அரும்பணியாற்றினார்.அக்காலப்பகுதியில் பௌதீகவள அபிவிருத்தியில் முக்கிய பங்குவகித்தார்.சுற்றாடல் சுத்தம், மரநடுகை, விளையாட்டு, சுற்றுலா, களப்பயணம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டினார்.
இக்காலப்பகுதில சமூக சேவையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அவர் சமூக நலன்புரி பொருளாதார அபிவிருத்தி எனும் சங்கமொன்றை ஏற்படுத்தி அதன்மூலம் ஆரம்பக்கல்வி பாடசாலை ஒன்றை வறிய மாணவர்களுக்காக இலவசமாக நடத்திச்சென்றதுடன் வறிய குடும்பங்களுக்கு ஆலோசனைகள்,வழிகாட்டலுடன் இடர் உதவிகளையும் வழங்கி இன்றும் இஸ்தாபக தலைவராக காணப்படுகின்றார்.
அகில இலங்கை சமாதான நீதி வானாகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டதாரியான அவர் லேக்ஹௌஸ் நிறுவனத்தின் மாவடிப்பள்ளி நிருபராக நீண்டகாலம் பணியாற்றியுள்ளார்.
2010.01.01 ம் திகதி முதல் கமு அல்ஜலால் வித்தியாலயதிற்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற மஸ்ஹூதுலெவ்வை சேர் அவர்கள் அப்பாடசாலையின் நூலக ஆசிரியராகவும் சமூகக்கல்வி ஆசிரியராகவும் இரு வருடங்கள் பணியாற்றினார்.அக்காலப்பகுதியில் 2011ம் ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக அவரின் தாய் மற்றும் மனைவியுடன் பயணமானார்.இந்நிகழ்வு அவரை பூரணத்துவமான ஒரு மனிதராக புடம் போட்டது.
2012ம் ஆண்டு அஷ்ரப் மகாவித்தியாலயதிற்கு இடமாற்றம் பெற்றுவந்த அவர் 2015.12.31 வரை இடைநிலைப்பிரிவு பகுதித்தலைவராகவும் சமூகக்கல்வி ஆசிரியராகவும் கடமையாற்றினார்.
2016.01.01 ம் திகதி முதல் ஆரம்பக்கல்வி பிரிவுக்கான பகுதித்தலைவராக நியமிக்கப்பட்டார்.அப்பிரிவிற்கான பல்வேறு மாற்று வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுதியதுடன் 2017 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 5 மாணவர்கள் ஒரேதடவையில் தெரிவு செய்யப்பட்டு இப்பாடசாலையில் சாதனை ஒன்றை நிலைநாட்ட காரணமானவர்களில் மஸ்ஹூதுலெவ்வை சேர் இன் பங்கு அழப்பெரியது.நேரத்திற்கு இயங்கும் ஒரு செயல்வீரர் என்று அவரை குறிப்பிட முடியும்.2018 ம் வருடத்திலும் தரம் ஐந்து மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் பெரும் சாதனை ஒன்றை நிலைநாட்டுவர் எனும் உறுதியான மனநிலையில் அவர் காணப்படுகின்றார்.ஆசிரியர் துறையில் 30 வருடங்களும் மேலும் 10 வருடங்கள் நீர்பாசன துறையிலும் பணியாற்றி மொத்தமாக 40 வருடங்கள் அரச துறையில் கடமைபுரிந்துள்ளார்.கண்டிப்புடன் கூடிய கருணை உள்ளம் கொண்டவர். அவருடன் முரண்பாடுகளை எவர் ஏற்படுத்திக்கொண்டாலும் ஒரு புன்முறுவலுடன் அமைதியாக இருந்து பலவெற்றிகளை கண்டு சாதனை படைத்த நல்லுள்ளம் கொண்டவர்.2018.10.05 ம் திகதி அரச சேவையில் இருந்து ஓய்வு பெரும் அவர் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயிளுடன் நலமுடன் வாழவேண்டும் என இருகரம் ஏந்தி பிராத்திப்போமாக.அதிபர் ஆசிரிய ஆசிரியயைகள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் அவருக்காக இறைவனிடம் பிராத்திப்போம்.
-யாசிம்பாவா அப்துல் மனாப் ஆசிரியர்
( கமு/ அல் அஷ்ரப் மகாவித்தியாலயம்,மாவடிப்பள்ளி)
No comments:
Post a Comment