2030ம் ஆண்டளவில் ஐக்கிய தேசியக் கட்சியை அடுத்த தலைமுறை தலைவரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
கடந்த தேர்தல் தோல்வியையடுத்து ரணில் பதவி விலக வேண்டும் என பாரிய கோசங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் தலைமைத்துவ சபை அமைத்து சமாளித்திருந்த ரணில் தற்போது அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கி வருவதாகவும் அவர்களில் ஒருவரிடம் 2030ல் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமைப் பொறுப்பிலிருப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment