மஹிந்த ராஜபக்சவின் ஜனபலய அரச விரோத போராட்டம் 2 மணி முதல் லேக் ஹவுஸ்ட சுற்று வட்ட பகுதியில் நடாத்தப்படவுள்ளதாக இறுதி நேர அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூட்டு எதிர்க்கட்சி.
மஹிந்த மற்றும் கோத்தபாய கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வை நாமல் ராஜபக்ச தலைமை தாங்குதவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பசில் ராஜபக்ச தனது நாடான அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் குருநாகல், மாத்தளை, கண்டி உட்பட பல இடங்களிலிருந்து பேருந்துகளில் ஆதரவாளர்கள் அழைத்து வரப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தகவல் வெளியிட்டுள்ளமையும் பொலிசார் தயார் நிலையில் இருப்பதாகவும் தேவையேற்படின் நடவடிக்கையெடுக்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment