16 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கராச்சியிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க வந்தடைந்த விமானத்திலேயே குறித்த நபர் பயணித்ததாகவும் தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து போதைப் பொருளைக் கடத்த முயன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2009 யுத்த நிறைவின் பின் இலங்கை போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ளதாக அண்மையில் ஹர்ஷ டிசில்வா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment