நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பம் ஒன்றின் விலை பதினைந்து ரூபாவால் உயர்த்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் (AICOA).
12.5 கி.கிராம் சமையல் எரிவாயு சிலின்டரின் விலை 1733 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் சிற்றுண்டிச்சாலைகள் மேலதிகமாக ஆறாயிரம் ரூபா எரிவாயுவைப் பெற செலவு செய்வதாகவும் அரசாங்கம் மக்களைக் கருத்திற் கொள்ளாது நிறுவனங்களின் வேண்டுகோளிற்கிணங்க விலையை உயர்த்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில், தாமும் உணவுப்பண்டங்களின் விலையை உயர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் இன்று நள்ளிரவு முதல் அப்பத்தின் விலை 15 ரூபாவாக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment