வீடியோ கேம் அனுபவத்தில் விமானமொன்றைத் திருடிய 29 வயது இளைஞன் விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
சியட்டல் விமான நிலையத்தில் தரித்திருந்த விமானமே இவ்வாறு திருடப்பட்டுள்ள நிலையில் விமானம் சற்று முன்னர் தீவொன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது..
போர் விமானங்களால் விரட்டப்பட்ட நிலையில், வீடியோ கேமில் பழகியுள்ளதால் தன்னால் நன்றாகப் பறக்க முடியும் எனவும், தரையிறக்கிய பின்னர் தனக்கு விமானியாகப் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுமா என்றும் கட்டுப்பாட்டு அறையுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள குறித்த நபர் விமான சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளதாகவும் குறித்த சம்பவம் தீவிரவாத செயலில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வானில் பறந்து கொண்டு, தனது ஆசைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் தீவுப் பகுதியொன்றில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விமானத்தைக் கடத்திய நபரைத் தேடும் பணிகள் ஆரம்பித்துள்ளதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment