ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதியொருவர் உருவாவதற்கான நேரம் வந்து விட்டதாக தெரிவிக்கிறார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.
கடந்த 25 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதியொருவர் உருவாகாத நிலையில் தனியரசு அமையவில்லையென்பதால் கட்சி ஆதரவாளர்கள் பெரும் சிரமப்படுவதாகவும் இனியும் தாமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலசுகட்சியினரிடம் நீண்டகாலமாக அப்பதவி இருந்துள்ள அதேவேளை ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் உருவாகியுள்ளதாகவும் அதனை மாற்றியமைக்கும் தருணம் நெருங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment