பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பௌத்த துறவியொருவருக்கு 200 மணி நேர சமூக சேவை (ஊதியம் இல்லாத) தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது ஸ்கொட்லாந்து ஷெரிப் நீதிமன்றம்.
ரேவதா கம்புருவெல என அறியப்படும் 47 வயது பௌத்த துறவிக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
யோகா பயிற்சி நெறியின் போது அத்துமீறலில் ஈடுபட்டதோடு தொட முயற்சித்தது மற்றும் பாலியல் ரீதியான பேச்சுக்களுடன் உடற்பாகங்களை வர்ணித்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment