அகில இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான 12 வயதுக்குட்பட்ட உதைப் பந்தாட்டப் போட்டியில் கிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலை சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.
இன்று (09) பதுளையில் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாண ஹென்றிக் பாடசாலை அணியும் கிண்ணியா அல் அக்சா தேசிய பாடசாலை அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடியிருந்தது.
கிண்ணியா அல்அக்ஸா பாடசாலை அணியினர் மூன்று கேல்களினால் (பெனல்ட்டி) வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு "Road to Barecelona " வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டுள்ளனர்.
கிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலை அணியினருக்கு அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம் நன்றிகளையூம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
-ஹஸ்பர் ஏ ஹலீம்
No comments:
Post a Comment