மாவனல்லை, ரந்திவெல பகுதியில் சட்டவிரோத மது பான தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் தப்பியோட அவரது கணவர் உதவிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தொன்றை உருவாக்கி மனைவியை தப்ப வைத்துள்ளார் குறித்த நபர்.
இந்நிலையில், மனைவிக்குப் பதிலாக தற்போது குறித்த நபரை (42) விசேட அதிரடிப்படையினர் தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment