வெலிகம: STF போன்று நடித்து பணம் பறிப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 25 August 2018

வெலிகம: STF போன்று நடித்து பணம் பறிப்பு!


தம்மை விசேட அதிரடிப்படையினர் என அடையாளப்படுத்தி வெலிகம பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 1.2 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


மோட்டார் சைக்கிள்களில் குறித்த நபரைப் பின்தொடர்ந்த கொள்ளையர்கள் தனியான ஒரு இடத்தில் அவரை நிறுத்தி, போதைப் பொருள் இருப்பதாக துப்பு கிடைத்திருப்பதாகவும் சோதனையிட வேண்டும் எனவும் தெரிவித்து அவரிடமிருந்த பணத்தை அபகரித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, முன்னாள் படை வீரர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் அண்மைக்காலங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment