கந்தேகெதரவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று மு.ப குடை சாய்ந்து பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 75 அடி தூரம் பேருந்து பள்ளத்தில் உருண்டுள்ள நிலையில் 30 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயப்பட்டவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment