எதிர்க் கட்சித் தலைவர் பதவி சலித்து விட்டது: JO - sonakar.com

Post Top Ad

Monday, 27 August 2018

எதிர்க் கட்சித் தலைவர் பதவி சலித்து விட்டது: JO



எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கான போட்டியைக் கைவிட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றது கூட்டு எதிர்க்கட்சி.



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த ஆதரவு அணியினர் ஒன்றிணைந்து தம்மை எதிர்க்கட்சியாக நிறுவும் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டதோடு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற தீவிரமாக முயன்று வந்தது.

எனினும், ஆட்சியில் பங்கெடுக்கும் ஒரு கட்சியின் உறுப்பினர்கள் எனும் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பெற முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மஹிந்தவை ஜனாதிபதியாக்கும் முயற்சியை ஆரம்பித்திருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment