கூட்டு எதிர்க்கட்சியினரால் எதிர்வரும் செப்டம்பர் 5ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கொழும்பை நோக்கி மக்கள் சக்தி எனும் பாரிய அரச எதிர்ப்பு பேரணியை முன்னிட்டு அன்றைய தினத்தை அரச விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்கிறார் உதய கம்மன்பில.
மக்களுக்கு ஏற்படப் போகும் அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு இவ்வாறு அரச விடுமுறையை அறிவிக்க வேண்டும் எனவும் அன்றைய தினம் கொழும்பு ஸ்தம்பிக்கும் எனவும் தெரிவிக்கிறார்.
தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக அரச இயந்திரத்தை முடக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் கூட்டு எதிர்க்கட்சி நடாத்தவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும் நிமித்தம் தனியார் நிறுவனங்களும் தமது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment