ISIS தொடர்பு: இலங்கையைச் சேர்ந்த நிசாம்தீன் அவுஸ்திரேலியாவில் கைது! - sonakar.com

Post Top Ad

Friday, 31 August 2018

ISIS தொடர்பு: இலங்கையைச் சேர்ந்த நிசாம்தீன் அவுஸ்திரேலியாவில் கைது!


தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த முஹமத் கமர் நிசாம்தீன் என அறியப்படும் 25 வயது நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.


பல்வேறு தாக்குதல் இலக்குகள், தனிநபர் பெயர்கள் அடங்கிய புத்தகம் மற்றும் பல இலத்திரனியல் உபகரணங்களும் குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பிணை மறுக்கப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியு சௌத் வேல்ஸ் பல்கலையில் கல்வி கற்பதற்கான விசாவுடன் அங்கு சென்றிருந்த நிசாம்தீன், பல்கலையில் வேலைவாய்ப்பொன்றையும் பெற்று அதனூடாக பல இடங்களுக்கு பிரயாணம் செய்து வந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment