ஞாபகம் இல்லை; CID யினருக்கு மஹிந்த பதில்! - sonakar.com

Post Top Ad

Saturday, 18 August 2018

ஞாபகம் இல்லை; CID யினருக்கு மஹிந்த பதில்!


நேற்றைய தினம் தன்னை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்தமை அரசியல் பழிவாங்கல் என வர்ணித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டிருந்த வேளை கரு ஜயசூரியவின் தலையீட்டிலேயே அவர் விடுவிக்கப்பட்டதாக முன்னர் கரு தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். எனினும், தன்னை அவ்வேளையில் எத்தனையோ தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் கரு ஜயசூரிய தொடர்பு கொண்டாரா என ஞாபகமில்லையெனவும் மஹிந்த பதிலளித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நபரை விடுவித்தமை தொடர்பில் வினவப்பட்டபோது அவரை விடுவித்தது தவறா என தான் திருப்பிக் கேட்டதாகவும் மஹிந்த தனது சி.ஐ.டி விசாரணை தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

மஹிந்த ஆட்சியில் கடத்தப்பட்ட பெரும்பாலானோர் காணாமல் போயிருந்த நிலையில் கீத் நொயார் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment