ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஏலவே, கோத்தபாய ராஜபக்ச மற்றும் கரு ஜயசூரிய இவ்விவகாரத்தில் தமது வாக்குமூலத்தை வழங்கியுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு சென்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தமது விசாரணையை மேற்கொள்கின்றனர்.
கடத்தப்பட்ட ஊடகவியலாளர் கரு ஜயசூரியவின் தலையீட்டின் பின்னரே விடுவிக்கப்பட்டிருந்ததாக முன்னர் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment