முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிரொஜ் கொலை மற்றும் ஆட்கடத்தல் விவகாரங்களில் தொடர்பு பட்டதாகக் கூறப்படும் நேவி சம்பத் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சுமார் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்திலும் நேவி சம்பத் என அறியப்படும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிகே தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையின் லெப்டினன்ட் தரத்தில் குறித்த நபர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment