பைசரின் வேடிக்கையால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி: மரிக்கார் - sonakar.com

Post Top Ad

Sunday, 26 August 2018

பைசரின் வேடிக்கையால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி: மரிக்கார்


தான் கொண்டு வந்த பிரேரணையைத் தானே நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது நிராகரித்து அமைச்சர் பைசர் முஸ்தபா செய்த வேடிக்கையால் ஆளுங்கட்சிக்கு பாரிய நெருக்கடி உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.



போகும் இடங்களிலெல்லாம் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடமே கேள்வியெழுப்புவதாகவும் பைசர் தேவையற்ற நெருக்கடியை உருவாக்கியுள்ளதாகவும் மரிக்கார் மேலும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, உலகின் எந்தவொரு நாடாளுமன்றிலும் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறவில்லையென கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்ற அதேவேளை, நிராகரிக்கப் போகும் பிரேரணையை சமர்ப்பித்து, விவாதம் நடாத்தி மக்கள் பணத்தை வீணடித்தது ஏன் என விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நிலையில், பிரேரணை தோற்றாலும் பழைய முறைமையில் தேர்தலை நடாத்தவிடப் போவதில்லையெனவும் பைசர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment