நாட்டில் ஜனநாயகம் முழுமையாக செத்து விட்டதாக தெரிவிக்கின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, செப் 5ம் திகதி முதல் பாரிய அளவில் போராட்டங்கள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார்.
நல்லாட்சியென மக்களை நம்ப வைத்து, தற்போது முழுமையான சர்வாதிகாரம் நடப்பதாகவும் மக்கள் சுதந்திரமற்றுத் தவிப்பதாகவும் வாழ்க்கைச் செலவு உயர்ந்து மக்கள் தவிப்பதாகவும் மஹிந்த மேலும் தெரிவிக்கிறார்.
மஹிந்தவின் ஆட்சியில் இவ்வாறான சூழ்நிலையிலிருந்து தவிர்ந்து கொள்ளவே மக்கள் மைத்ரிபாலவை பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டிருந்த அதேவேளை மூன்றரை வருட ஆட்சியில் தற்போது மக்கள் சலிப்படைந்துள்ள நிலையில் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment