சவுதியில் தற்கொலைத் தாக்குதல் நடாத்துவதற்கான அங்கிகளுடன் தயாராகியிருந்த நபர் ஒருவர் அல்-புகையிரா பகுதியில் பொலிசாரால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
கார் ஒன்றில் தப்பியோடிய குறித்த நபர் பொலிசாரோடு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும் அவ்வேளையில் காயப்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இயந்திரத் துப்பாக்கி, பெருமளவு துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment