செப்டம்பர் இறுதி - ஒக்டோபர் முற்பகுதியில் செயற்கை மழையைத் தருவிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது இலங்கை மின்சார சபை.
தாய்லாந்து நிபுணர்களின் உதவியுடன் செயற்கை மழையை உருவாக்குவதற்கான செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த மாத இறுதியில் வெள்ளோட்ட முயற்சி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வரட்சியால் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழ்நிலையில் இம்முறைமையை பயன்படுத்தவுள்ளதாக மின்சார சபை முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment