புத்தளம் , நாகவில் , றசூல்நகர் கிராமத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான மீராலெப்பை நஜீப் (வயது- 53) என்பவரே கத்திக்குத்தில் மரணமடைந்த சம்பவம் இன்று(04/08) காலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மரணித்தவருக்கும் அவரது தங்கையின் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலையில் முடிந்துள்ளதுடன் கொலையாளி பொலிசில் சரணடைந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின்பின் நஜீப்பின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிஸார் விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் மரணமடைந்தவர், மன்னார், றசூல்புதுவெளியை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-கரீம் எ. மிஸ்காத்
No comments:
Post a Comment