மாடறுப்பு அனுமதி; ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் அமளி! - sonakar.com

Post Top Ad

Monday, 20 August 2018

மாடறுப்பு அனுமதி; ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் அமளி!


ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானை முன்னிட்டு மாடறுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் இன்று  பெரும் அமளி நிலவியது.

மஹிந்த அணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் இதற்கெதிராக கருத்துக்களை முன் வைத்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்ததன் பின்னணியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியுள் உள்ள ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் தனுஷ்க மல்வௌவே கண்டி பெரஹரவைக் காரணங்காட்டி அதன் பின்னணியில் ஹாரிஸ்பத்துவயிலும் தடை விதிக்கப்பட வேண்டும் என முதலில் வலியுறுத்தியுள்ள அதேவேளை தலைவர் அதனை நிராகரித்து அனுமதியை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் அங்கம் வகிக்கும் பிரதேச சபையில் இவ்வாறு மாடறுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது கவலையளிப்பதாக பிரதேச சபை உறுப்பினர் கொஹாகோட தயானந்த தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-மொஹொமட் ஆஸிக்

No comments:

Post a Comment