ஆர்ப்பாட்டங்களின் போது பலஸ்தீனத்தின் கொடியை உயர்த்துவதைத் தடை செய்யும் வகையிலான புதிய சட்டப் பிரேரணை ஒன்று இஸ்ரேல் நாடாளுமன்றில் முன் வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தடையை மீறுவோருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை பரிந்துரைக்கப்படவுள்ள அதேவேளை கோடை விடுமுறையையடுத்து ஆரம்பமாகவுள்ள தவணையில் இச்சட்டப் பிரேரணை முன் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலவே, ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன கொடி ஏற்றப்படுவதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment