அனைத்து பொது சேவைகள் ஊழியர்களது சம்பளத்தை மீளாய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க ஆணைக்குழுவொன்றை நிறுவவுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ரயில்வே ஊழியர்கள் சர்ச்சை தொடர்பிலான பேச்சுவார்த்தையின் போதே ஆணைக்குழு ஊடாக சம்பள மீளாய்வு இடம்பெறும் என தெரிவித்த அவர், அனைத்து பொது சேவைகளும் உள்ளடக்கப்படும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை ஏழு நாட்களுக்குள் தமக்கான தீர்வு தரப்படாவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment