கூட்டாட்சியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசியல் பின்னணியுள்ளவை என அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில் வேலை நிறுத்தங்களால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை, மக்களே பாதிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் அரசை முடக்கி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மஹிந்த அணி முயற்சித்து வருவதாக ஆளுந்தரப்பு தெரிவிக்கிறது.
இதேவேளை, அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடாத்தி, மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கிறது, இந்நிலையில் பொது சேவை ஊழியர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தககது.
No comments:
Post a Comment