ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா ஊழல் மோசடி விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் ஸ்ரீலங்கன் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
மஹிந்த அரசின் ஊழல்களை தொடர்ந்தும் விசாரித்துக் கொண்டிருக்கும் கூட்டாட்சி, தற்போது விசேட நீதிமன்றையும் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், மத்திய வங்கி ஊழல் விசாரணையை அடுத்து ஸ்ரீலங்கன் - மிஹின் லங்கா ஊழல்களை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment