தனக்கு அரசியலில் ஈடுபடும் எந்த எண்ணமும் இல்லையுமில்லையென தெளிவுபடுத்தியுள்ளார் முன்னாள் தேசிய கிரிக்கட் அணி தலைவர் குமார சங்கக்கார.
அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் சங்கக்காரவை பொது வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக உலவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
வதந்திகளுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் நிலையில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இது வரை இருந்ததுமில்லை, இனியும் வரப் போவதில்லையென உறுதியாக சொல்லி வைக்க விரும்புவதாக சங்கக்கார தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் ரணில் - மைத்ரி - மஹிந்த - கோத்தாவைச் சுற்றி இலங்கை அரசியல் எதிர்காலம் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment