பிரிவினைவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தது போல் தற்போது உருவெடுத்துள்ள தொழிற்சங்க பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
கூட்டாட்சி அரசின் பதவிக் காலம் முழுவதுமாக தொடர் தொழிற்சங்க போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவை அரசியல் பின்னணியுடன் நடாத்தப்படுவதாக அரசு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது ரயில்வே வேலை நிறுத்த விவகாரம் அரசை வெகுவாக பாதித்துள்ளதுடன் மாற்றீடாக இராணுவத்தின் உதவியுடன் பேருந்து சேவைகள் நடாத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர்ந்தும் அரச இயந்திரத்தை முடக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மஹிந்த அணி திட்டமிட்டு வருவதாகவும் இப் பயங்கரவாத நடவடிக்கை தோற்கடிக்கப்படும் எனவும் ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment