க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் கண்காணிப்பு பணியில் முன்னாள் மற்றும் இந்நாள் இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்தப்படுவதற்கு கல்வித் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்துள்ள இராணுவத்தினர் கடுமையான கட்டளைகளைப் பிறப்பித்து வருவதுடன் கல்வி அதிகாரிகளை முழுமையாகக் கட்டுப்படுத்தி வருவதாகவும் இது ஏற்புடையதில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சைத் திணைக்களத்தின் முன்னெடுப்பிலேயே 2268 பரீட்சை நிலையங்களுக்கும் இவ்வாறு கூடுதல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment