முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி காலமானார்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 August 2018

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி காலமானார்!


நோய்வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான 'கலைஞர்' மு. கருணாநிதி காலமானார்.



கடந்த ஜுலை 18ம் திகதி தீவிர நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி தனது 96வது வயதில் இன்று மாலை உள்ளூர் நேரம் 6.10 மணியளவில் காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலின் சிரேஷ்ட தலைவரான கருணாநிதியின் மறைவுக்கு இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment