அரசியலை விட்டு முழுமையாக ஒதுங்கி வெளிநாடு செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்க முன்னர் முடிவெடுத்திருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் தனதிலக தேரர்.
எனினும், மறைந்த சோபித தேரர் மற்றும் தன் போன்ற பௌத்த பிக்குகளின் அறிவுரையை ஏற்றே ரணில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் தேரர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
30 வருடத்தில் தேங்காய் பறிப்பவரும் கைத்தொலைபேசி வைத்திருப்பார் என ரணில் அக்காலத்தில் தெரிவித்த கருத்து பாரிய விமர்சனத்துக்குள்ளான போதிலும் இன்று அதுதான் உண்மையாகியுள்ளதாகவும் ரணில் அரசியல் தீர்க்கதரிசனம் உள்ளவர் எனவும் தேரர் தெரிவிக்கின்றமையும் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி ரணிலின் தலைமையில் தொடர் தோல்வியை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment