நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு பதிலாக மேலதிக கொடுப்பனவுகளை உயர்த்தினால் நன்மை பயக்கும் என தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல இடங்களுக்கும் பயணிக்கும் தேவையும் தமது தொகுதி மக்களுக்கு சேவைகளை அதிகரிக்கும் தேவையும் இருப்பதனால் சம்பளத்தை விட எரிபொருள் மற்றும் இதர கொடுப்பனவுகளை உயர்த்தலாம் என அவர் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனினும், சம்பள உயர்வைத் தான் அனுமதிக்கப் போவதில்லையென மைத்ரி ஏலவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment