மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கலாநிதி ஹஸ்புல்லாஹ் (65) இன்று யாழ் வைத்தியசாலையில் காலமானார்.
பேராதனை பல்கலைக் கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் கடமையாற்றி ஓய்வு பெற்ற அவர் தற்போது எல்லை நிர்ணய சபையின் அங்கத்தவராகவும், யாழ் பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினராகவும் இருக்கும் அவர் பல்வேறுபட்ட சமுக மேம்பாட்டிற்காக குறிப்பாக இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தீர்வு விடயங்கள், இனநல்லிணக்கச் செயற்பாடுகளில் செயற்பட்டு வந்த சிறந்த ஒரு அறிஞராகவும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் இவர் காணப்படார்.
ஆசிரியை சுகாதாவின் கணவரான இவருக்கு ஜவ்பர் ஸாதிக், பாத்திமா ஸப்னா, பாத்திமா ஹஸ்னா ஆகிய மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
தமிழ், முஸ்லிம் மற்றும் பௌத்த மக்களின் இன நல்லுறவுக்காக நல்ல ஆலோசனைகளை வழங்கி ஒற்றுமைக்காக குரல் கொடுத்து வந்ததுடன் சமாதான செயற்பாடுகளுக்காக தன்னாலான ஆலோசனைகள், ஒத்துழைப்புக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் வழங்கி வந்த ஒரு புத்தி ஜீவி என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டியில் வசித்து வந்த இவர் தனது சமுக சேவை மேம்பாட்டிற்காக யாழ் சென்ற வேளையில் ஏற்பட்ட கயீனம்னம் காரணமாக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (25) அதிகாலை காலமானார். இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை மன்னார் எருக்கலம் பிட்டியில் இடம் பெறும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment