சந்திரிக்காவால் பௌத்தத்துக்கு இழுக்கு: ஒமல்பே தேரர்! - sonakar.com

Post Top Ad

Saturday, 18 August 2018

சந்திரிக்காவால் பௌத்தத்துக்கு இழுக்கு: ஒமல்பே தேரர்!


நல்லிணக்கத்தை உருவாக்குவதெனும் பெயரில் சந்திரிக்கா பௌத்தத்துக்கு இழுக்கை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார் ஒமல்பே சோபித தேரர்.



சந்திரிக்காவின் தலைமையிலான தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான நாடகத் தொடர்கள் குறித்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் அந்நாடகங்களுக்கு பௌத்த பாரம்பரியங்களை அவமதிக்கும் வகையில் தலைப்புகள் வைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரபல பௌத்த வாக்கியமான 'தெருவன் சரணய்' என்பதைத் திரிபு படுத்தி 'தருவன் (குழந்தைகள்) சரணய்' என தலைப்பிட்டிருப்பதாகவும் இது போன்ற விவகாரங்களால் பௌத்தம் அவமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றமையும் பயங்கரவாதி ஞானசார மனிதத்துக்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் 'அப சரணய்' என சொல்லி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ONUR தயாரிப்பில் உருவாகியுள்ள நாடகத் தொடர் 'கனட்ட பஹரக்' கன்னத்தில் அறை என்றே பெயரிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment