இந்துத்வா அடிப்படைவாதத்தில் இயங்கும் பாரதிய ஜனதா கட்சி சார் விராத் ஹிந்துஸ்தான் சங்கம் நடாத்தவுள்ள மாநாடொன்றில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை நேரில் வந்து அழைத்துள்ளார் இந்தியாவின் சர்ச்சைப் பேர்வழி சுப்பிரமணிய சுவாமி.
இதற்கென புதனன்று இலங்கை வந்த சுவாமி, ஹம்பாந்தோட்டை சென்று மஹிந்தவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
முஸ்லிம் விரோத நிலைப்பாட்டை ஊக்குவிப்பதிலும், சர்ச்சைக் கருத்துகளை வெளியிடுவதிலும் பெயர் பெற்றுள்ள சுப்பிரமணிய சுவாமி தனது நீண்ட கால நண்பர் எனவும் இலங்கை மீது அக்கறை கொண்டவர் எனவும் மஹிந்த ராஜபக்ச விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment