சரத் பொன்சேகாவின் மிக நெருங்கிய ஆதரவாளரும் பாதாள உலக பேர்வழியென அறியப்படுபவருமான யகட மஞ்சு என அறியப்படும் மஞ்சுள சமிந்த விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பேலியகொடயில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவ்வேளையில், பல கடவுச்சீட்டுகள், தேசிய அடையாள அட்டைகள், ஹெரோயின் மற்றும் துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் மெய்ப்பாதுகாவலர்களாக பாதாள உலக பேர்வழிகள் இருப்பதாக அண்மையில் சர்ச்சை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment