பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் தாரிக் ரமதானுக்கு பிணை வழங்க மறுத்துள்ளது பிரெஞ்சு நீதிமன்றம்.
பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தாரிக் ரமதானை பிணையில் விடுவிக்குமாறும் அவரது கடவுச்சீட்டுடன் மூன்று லட்சம் யூரோ ரொக்கத்தை செலுத்தவும் தயார் எனவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்த போதிலும், பிணையில் விடுவித்தால் அவர் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் இருப்பதாக தெரிவித்து பிணை மறுக்கப்பட்டுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான தாரிக் ரமதானுக்கு எதிராக மூன்று பெண்கள் சாட்சியளிக்கின்ற நிலையில் வழக்கு விசாரணை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment